ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ரூட்டு தல போல, அதிர்ச்சி சம்பவம்.. உயிர்ப்பிச்சை வேண்டாம், மாணவர் தற்கொலை.. காவல்துறையினர் உஷார்.!!

அந்த கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர்ப்பிச்சை எனக்கு வேண்டாம். நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பேருந்து மற்றும் இரயில்களில் மோதல் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. இவை பல நேரங்களில் கொலை, கொலை முயற்சி சம்பவத்திலும் முடிந்துள்ளன. இந்த நிலையில், எதிரெதிர் 2 கல்லூரியை சார்ந்த மாணவர்களில், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் பயின்று வருகின்றனர். திருநின்றவூர், ஆவடி சுற்றுவட்டார பகுதியை சார்ந்த மாணவர்கள் பலரும் இரயில் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் குருவராஜபேட்டை பகுதியை சார்ந்த குமார் என்ற வாலிபர், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் கல்லூரியில் முதுகலை படிப்பு முதல் வருடம் பயின்று வருகிறார். இவர், நேற்று காலை நேரத்தில் கல்லூரிக்கு சென்றுவிட்டு மின்சார இரயிலில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, திருநின்றவூர் அருகே வருகையில் மற்றொரு கல்லூரியை சார்ந்த மாணவர்கள் குமாரை கேலி, கிண்டல் செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் தரப்பில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூழ்ந்துகொண்டு, "தனியாக வந்து மாட்டிக்கொண்டாயே.. உயிர் வேண்டுமா?. பிச்சை போடுகிறோம், ஓடிச்செல்" என்று கூறி அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்துபோன மாணவர் குமார், திருநின்றவூர் இரயில் நிலையத்தில் கீழே இறங்கி, அவ்வழியாக வந்த இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக கல்லூரி நண்பர்களுக்கு வாட்ஸப்பில் பேசி ஆடியோ அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், "குறிப்பிட்ட கல்லூரி பெயரை சொல்லி, அவர்கள் போட்ட உயிர்ப்பிச்சை எனக்கு வேண்டாம். அவர்களின் உயிர்பிச்சையில் என்னால் வாழ முடியாது. நான் செத்துவிடுகிறேன். என்னை தப்பா நினைக்க வேண்டாம்.
அப்பா, அம்மா என்னை தப்பா நினைக்க வேண்டாம். அவங்க போட்ட பிச்சையில் என் வாழ்க்கை முடியாது" என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவள்ளூர் இரயில்வே காவல் துறையினர், குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தகவலை அறிந்த சக தோழர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னையிலும் மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.