மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!
இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வனஜா (வயது 27) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த 2021 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம், திருமண வரன் பார்க்கும் இணையத்தளம் வழியாக ராகுல் என்ற நபருடன் பழகி வந்துள்ளார்.
பழகிய சில நாட்களிலேயே திருமணம் குறித்து பேச நேரில் அழைத்த நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் விடுதிக்கு அழைத்து சென்ற ராகுல், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வனஜாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்ததும் வனஜா தன்னிலை உணர்ந்து கேட்டபோது, ராகுல் திருமணம் செய்வதாக உறுதியளித்து இருக்கிறார். ஆனால், திருமணம் செய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த வனஜா கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து ராகுலை (வயது 27) கைது செய்து சிறையில் அடைத்தனர்.