#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போதை ஊசியால் துயரம்; தலைக்கேறிய போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சென்னை இளைஞர்.!
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது என பல நடவடிக்கை எடுத்தாலும், அதனை தொழிலாக செய்து வரும் கும்பலின் செயல்கள் தொடருகின்றன.
போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களும் தொடர்ந்து அதனை தேடி கண்டறிந்து வாங்கி பயன்படுத்துவதால், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில், அதீத போதை காரணமாக இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நபர் தீனதயாளன். இவர் அப்பகுதியில் ரௌடி போல வலம்வருவதால், காவல் நிலையத்தில் பல குற்றவழக்குகளும் உள்ளன. கஞ்சா போதைக்கு அடிமையான தீனதயாளன், எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கஞ்சா புகைத்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் கஞ்சா போதை போதாததால், ஊசி போதை செலுத்திக்கொண்டு சுற்றி வந்துள்ளார். இதனிடையே, இன்று ஊசி போதை செலுத்தியவர், தலைக்கேறிய போதையால் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிர்கால பாதிப்புகளால் மரணம் கூட ஏற்படும் எனினும், அதன் அளவு சிறிது அதிகமானனாலும் போதை ஊசிகள் நொடியில் மரணத்தை ஏற்படுத்தும். ஆகையால், இளைஞர்கள் போதைப்பொருட்களை உபயோகம் செய்யாமல், அதனை பழக்கத்தை கைவிட்டு நல்வழிப்படுவது நல்லது.