மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. 9 வயது சிறுமிக்கும், 15 வயது சிறுவனுக்கும் கல்யாணம்.! பெற்றோர்கள் மீது பாய்ந்த வழக்கு!!
மயிலாப்பூரில் 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் பெற்றோர்களே ரகசியமாக திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா பணியில் இருந்தபோது நேற்று முன்தினம், நபர் ஒருவர் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவில் கடந்த 10ம் தேதி 9 வயது சிறுமிக்கும்,15 வயது சிறுவனுக்கும் அவர்களது பெற்றோர்கள் ரகசியமாக திருமணம் செய்து வைத்ததுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
குழந்தை திருமணம்
பின்னர் அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் சிறுமி குறித்து விசாரித்து மேற்கு மாம்பலத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதலில் சிறுமியின் தந்தை அதனை மறுத்துள்ளார். பின்னர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காண்பித்த பிறகு அதனை உண்மையென ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: மதுரையில் அமைச்சர் வீட்டருகே பயங்கரம்.! நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி கொடூர கொலை!!
பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு
பின்னர் மயிலாப்பூரில் உள்ள சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவன், சிறுமியை மீட்டு கெல்லீஸ்சில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: 6 பேர்க்கு கொரோனா பாசிடிவ்.! சென்னை, கோவை மக்கள் அதிர்ச்சி.? சுகாதார துறை வேண்டுகோள்.!?