தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கோட் சூட்டுடன் முதல்வர் பழனிசாமி லண்டன் சென்றது ஏன்? அடுத்து எங்கே செல்லப்போகிறார் தெரியுமா?
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வெளிநாடு புறப்பட்டார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றார். மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் வழியாக லண்டன் சென்றடைந்தார்.
லண்டனில் தொழில்துறைப் பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் பழனிசாமி சுகாதாரத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அந்தச் சந்திப்பின் போது கோட், சூட் அணிந்து முற்றிலும் புதிய தோற்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி இருந்தார்.
இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தின் மேம்பாடுகளை தமிழகத்தில் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் கையெழுத்திடும் போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார்.
மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது, நோய்களை கையாளும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை தமிழகத்தில் செயல்படுத்த அறிக்கை ஒன்றில் கையெழுத்திட உள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடுத்த மாதம் 2ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ நகர்களுக்கு சென்று அமெரிக்க முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.