பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: விளம்பர பேனர் வைக்கும் பணியில் சோகம்.. ராட்சத பேனர் விழுந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி...!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் தனியார் விளம்பரபலகை அமைக்க பிரதானமான அமைப்பு உள்ளது. இன்று தனியார் ஹோட்டலுக்கு சொந்தமான விளம்பர பலகை அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ராட்சத பேனரானது திடீரென நிலைகுலைந்து தொழிலாளர்களின் மீது விழுந்தது. அதில் அங்கு பணியாற்றிய மூன்று தொழிலாளர்கள் நிகழ்வு இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பணி நடைபெறும் போது திடீரென சூறாவளிகாற்று வீசிய நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது நொடிப்பொழுதில் பேனரும் சரிந்து விழுந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.