செல்போன் பழக்கத்தை நம்பி சென்னை வந்து பணத்தை பறிகொடுத்த கோவை வாலிபர்.!
போனில் பழக்கமான நண்பனின் பேச்சை கேட்டு இருசக்கர வாகனம் வந்தவர், ரூ.25 ஆயிரம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது 32). சென்னையில் உள்ள மணலி பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 30). இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஹரி தனது நண்பரிடம் இருசக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்த நிலையில், சுரேஷ் குமார் ரூ.20 ஆயிரம் மதிப்பில் உள்ள இருசக்கர வாகனத்தை முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து, கோவையை சேர்ந்த மற்றொரு நண்பர் சங்கர் (வயது 34) என்பவருடன், சுரேஷ் குமார் சென்னை நண்பர் ஹரி கூறிய கும்மிடிப்பூண்டியில் உள்ள கவரைப்பேட்டை பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
சுரேஷ் குமார் மற்றும் சங்கர் வந்ததை அறிந்த ஹரி, நண்பர்களை கண்லூர் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று, கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சுரேஷ் குமார் மற்றும் சங்கர் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஹரி உட்பட 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.