மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெல்லை காங்கிரஸ் ஜெயக்குமார் இறந்த இடத்தில் கிடைத்த அந்த பொருள்.! அடுத்த டிவிஸ்ட்.!
நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகியான ஜெயக்குமார் மர்ம மரணம் அடைந்த நிலையில் அவர் வாங்கிய டார்ச் லைட் தற்போது போலீசார் சோதனையில் சிக்கி இருக்கிறது.
பிணமாக கிடந்த ஜெயக்குமார் :
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தன்சிங். கடந்த மே 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் பிணமாக இறந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு உடல் தீயிட்டு கொளுத்தப்பட்டு இருந்தது. அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய சில கடிதங்களை போலீசார் விசாரணையில் கைப்பற்றினர்.
சிசிடிவி காட்சிகள் :
இந்த நிலையில் 10 தனி படை அமைத்து இது பற்றி விசாரணை நடந்த வருகிறது. அவர் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும், அவர் எப்படி உயிர் இழந்தார் என்பது பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் ஒரு கடைக்கு சென்று டார்ச் லைட் வாங்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
இதையும் படிங்க: தொடரும் மர்ம மரணங்கள்.. வீட்டிலேயே மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு!
பிணத்திற்கு அருகே டார்ச் லைட் :
எனவே, போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். இந்த நிலையில், அவர் உயிரிழந்த இடத்திற்கு அருகில் டார்ச் லைட் ஒன்று கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இது அவர் கடையில் வாங்கிய டார்ச் லைட் தானா என்பதை போலீசார் உறுதி செய்யும் நோக்கில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு... காவல் துறை தீவிர விசாரணை.!