#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெற்றி அதிர்ஷ்டம்.! டிடிவி தினகரனுக்கு மீண்டும் கிடைத்த அந்த அதிர்ஷ்டம்.! கொண்டாடும் அ.ம.மு.க-வினர்.!
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு, சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தையும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் அக்கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் கொடுக்கப்படவில்லை. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியதை அடுத்து அ.ம.மு.க-வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.