சேலத்தில் உறைய வைத்த சம்பவம்.. இறப்பிலும் இணைபிரியாத தம்பதி.!



Couples death in sameday in salem

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமையனூர் எம்ஜிஆர் நகரில் கூலி வேலை செய்து வந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி கோகிலா. இந்த தம்பதியினருக்கு கங்கா, கௌரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Salem

இந்த நிலையில் சமீபத்தில் விபத்தில் சிக்கிய திருப்பதிக்கு இரண்டு கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பதி கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு திருப்பதி உயிரிழந்தார். இதில் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த கோகிலா அழுது கொண்டே இருந்தார்.

Salem

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கோகிலாகும் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து திருப்பதியின், உடலுக்கு அருகே கோகிலாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.