தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
1000 ரூபாய் பொங்கல் பரிசுக்கு ஆப்பு வைத்த நீதி மன்றம்! இனி யாருக்கும் கிடையாது!
பொங்கல் பரிசாக அணைத்து குடும்ப அட்டைகளுக்கு ரூ. 1000 பொங்கல் பரிசு தரப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்குவதற்கு உயநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
ஒவொரு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் தரும் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற இடங்களில் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் நேற்று முதல் இந்தப் பரிசுதொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடவேண்டும் என கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து உத்தரவிட்ட நீதிபதி, பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கக் கூடாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.
வசதியானவர்களுக்கு கொடுக்கும் பணத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கும் சாலை போடுவதற்கும் பயன்படுத்தலாம். எதற்காக பொங்கல் பரிசு தரப்படுகிறது? அரசு பணத்தை பணக்காரர்களுக்கு கொடுப்பது ஏன்? பொங்கல் பரிசு என்ற பெயரில் வாரி வழங்கும் பணம் கட்சிப்பணமா? நீதிபதிகளுக்கும் தலைமை வக்கீலுக்கும் எதற்கு பொங்கல் பணம்? என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.