சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
பசுவின் வயிற்றை சோதித்த மருத்துவர்கள்! வயிற்றில் இருந்ததை பார்த்து பேரதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் முனிரத்தினம் என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் அவரது வீட்டில் பசு மாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்ந்துவந்த மாடு சில நாட்களாக சிறுநீர் மற்றும் சாணம் கழிக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளது.
இதனால் முனிரத்தினம் அவரது மாட்டினை அருகில் இருந்த காலநடை மருத்துவரிடம் கொண்டு சென்று பார்த்துள்ளார். அதனைப்பார்த்த மருத்துவர் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து முனிரத்தினம் அவரது பசுவை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பசுவை ஸ்கேன் செய்து பார்த்தபோது பசுவின் வயிற்றில் கழிவுப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர் மருத்துவர்கள், இந்தநிலையில் அந்த பசுவிற்கு சுமார் ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். வெளியில் அகற்றப்பட்ட அந்த கழிவு அது சுமார் 52 கிலோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் உணவாக உண்பது புல், மரத்தழைகள் தான். ஆனால் அந்த நிலை மாறி பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் அவலநிலை உறவாகியுள்ளது. இதனால் தான் பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கிலோ கணக்கில் அகற்றப்பட்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.