திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குளிப்பதை படமெடுத்து மிரட்டல்.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. சிதம்பரத்தில் பதறவைக்கும் துயரம்.!
கல்லூரி மாணவி குளிப்பதை படமெடுத்து மிரட்டியதால், விரக்தியடைந்த 21 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், தெற்கு பிச்சாவரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மகள் அஜினா தேவி (வயது 21). இவர் சிதம்பரம் அரசு கல்லூரியில் எம்.எஸ்சி முதல் வருடம் பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை இவர் கல்லூரிக்கு செல்லவில்லை.
கிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவை பூட்டிய அஜினா தேவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார்.
அப்போது, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது தொடர்பாக அண்ணாமலை நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அஜினா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனையாக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவரின் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், "நான் குளிக்கும்போது என்னை ஆபாசமாக படமெடுத்து ஒருவர் மிரட்டி வந்தார். அதனால் இந்த முடிவை எடுக்கிறேன். அப்பா அம்மா என்னை மன்னியுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவியை மிரட்டி வந்தவர் யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.