மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை.. பெண் துள்ளத்துடிக்க உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடியை உடைத்து நொறுக்கிய உறவினர்கள்.!
எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்த பெண்மணி நன்றாக பேசிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரின் உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சாவடி பகுதியில் வசித்து வருபவர் மீனா. இவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாரதி சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார்.
இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு உறவினர்களும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மீனாவுக்கு கைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்ததும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட மீனா உறவினர்களுடன் நன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும், மருத்துவர்களின் தவறான சிகிச்சையின் காரணமாகவே மீனா உயிரிழந்துவிட்டார் என்று கூறி மருத்துவமனை கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே, காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் அமைதியாகினர்.