மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி பலாத்காரம் செய்த கொடூரம்.. கடலூரில் பயங்கரம்..! நெஞ்சை பதறவைக்கும் தகவல்.!
28 வயது இளைஞன் சிறுமியை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்து, இறுதியில் அவரை பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள படுத்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 28). இதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமியின் மீது ஆசை கொண்ட பாரதி, அவரிடம் தன்னை நீ காதலிக்க வேண்டும் என கூறியுள்ளார். பாரதியின் பேச்சுக்களை ஏற்க மறுத்த சிறுமி, காதலிக்க இயலாது என்று கூறியுள்ளார்.
சிறுமியின் மனநிலையை புரிந்துகொள்ளாத பாரதி, தொடர்ந்து அவரிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாரதி சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்தது உறுதியாகவே, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.