மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளகாதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவனை, மருமகனை விட்டு வெட்டிக்கொலை செய்த மாமியார்.. பயங்கர சம்பவம்..!
கள்ளக்காதல் வயப்பட்ட கணவனை மனைவி தனது எதிர்கால மருமகனை வைத்து கொலை செய்து இளைஞனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய பரிதாபம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 50). இவர் என்.எல்.சி. முதல் சுரங்க சுகாதாரப்பிரிவில் பணியாற்றி வருகிறார். சண்முகத்தின் மனைவி சகிலா (வயது 46). தம்பதிகளின் மூத்த மகள் சித்ரா மருத்துவம் பயின்றுவிட்டு ஆந்திராவில் வேலைபார்த்து வருகிறார்.
இரட்டை குழந்தைகளான மகன் பிரேம் நாராயணன் (வயது 17), மகள் பிரியங்கா (வயது 17) ஆகியோர் தங்களின் பாட்டி வீடு உள்ள சேலத்தில் தங்கியிருந்தவாறு படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் சண்முகம் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக நெய்வேலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. என்.எல்.சி ஊழியர் சண்முகம் அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், தான் கஷ்டப்பட்டு வேலைசெய்து வரும் சம்பளத்தை அவருக்கே செலவு செய்துள்ளார்.
இதனால் சண்முகம் - சகிலா இடையே குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது. இதில், வாழ்க்கையின் மீது விரக்தி ஏற்பட்ட நிலையில் சகிலா காணப்பட தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக இரண்டாவது மகளின் காதலன் தமிழ்வளவனிடம் மாமனாரை கொலை செய்ய பேரம் பேசப்பட்டுள்ளது.
அதாவது, கணவரின் கள்ளகாதலால் எனது வாழ்க்கை நாசமாகிவிட்டது. இதனால் எனது கணவரை நீ கொலை செய்தால், எனது மகளை உனக்கே மணம்முடித்து தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து, தமிழ்வளவனும் சண்முகத்தை கொலை செய்து தப்பி சென்றுள்ளார். சகிலா எதுவும் தெரியாதது போல கணவரை மர்ம நபர்கள் கொலை செய்திட்டதாக ஆடிய நாடகம் விசாரணையில் அம்பலமாக, காவல் துறையினர் தமிழ்வளவன் மற்றும் சகிலா ஆகியோரை கைது செய்தனர்.