சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
"இனி கோவில் நிகழ்ச்சிகளில் இதுக்கு 'நோ'..." ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு புது ரூல்ஸ் போட்ட டிஜிபி சைலேந்திரபாபு.!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கோவில் திருவிழா சீசன் கலைக்கட்டி கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவிழாக்கள் என்றாலே ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான வரைமுறைகளை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தால் அந்த மனுவின் மீது ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் . அப்படி காவல்துறையினர் பதிலளிக்க தவறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாராளமாக நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.
கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ள டிஜிபி ஆபாச நடனம் மற்றும் பாடல்கள் எதுவும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதனை விழா ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது எனவும் வரைமுறையில் தெரிவித்துள்ளார்.
ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளின் போது பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆபாச ஆடைகள் அணியக்கூடாது எனவும் அறிவுறுத்திருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறும் பாடல்களும் ஒளிபரப்ப கூடாது எனவும் வந்த வரைமுறையில் தெரிவித்துள்ளார். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் போதைப் பொருள் விநியோகம் எதுவும் இருக்காமல் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிபந்தனைகள் மீறும் பட்சத்தில் ஏற்பாட்டாளர்களின் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.