மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூட்டமாக திரண்டு கறிவிருந்துடன் சூதாட்டம்; தோல்வியடைந்தால் அடிதடி; தர்மபுரியில் களைகட்டும் சம்பவம்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் சுற்றுவட்டாரத்தில் கம்மம்பட்டி, சேவேரி கொட்டாய், சோழியனூர், மூலக்காடு பகுதிகளில் விவசாய நிலங்கள், கிராமப்புற வீடுகள் நிறைந்துள்ளன.
இந்த பகுதியில் நூற்றுக்கணக்கில் திரண்டு மது மற்றும் கழிவிருந்தோடு இரவு பகலாக லட்சக்கணக்கில் பணத்தை வைத்து சூதாடுவது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் பெங்களூர் பகுதியில் இருக்கும் சூதாட்ட விரும்புகள் கூட்டமாக கலந்துகொள்ளும் நிலையில், இவர்களில் பணம் இழந்தவர்கள் திடீரென குழுக்களாக பிரிந்து சண்டையிடும் சம்பவமும் நடந்து வருகின்றன.
இதனால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விடு திரும்ப மாணவிகள் அச்ச நிலையில் இருந்து வருகின்றனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.