மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமும், அலட்சியம்.. இரண்டு உயிர்கள் பரிதாப பலி..! திண்டுக்கல்லில் நடந்த சோகம்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி, அம்பத்தூரை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை நேற்று பெருமாள்கோவில்பட்டி பிரிவு பகுதியில் சாலை விபத்து ஒன்று நடைபெற்றது.
மிதிவண்டியில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர், அலட்சியமாக தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அச்சமயம், அவ்வழியே இருசக்கர வாகனம் நேரடியாக மிதிவண்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மனோகரன் (வயது 60) என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மிதிவண்டியில் வந்த சின்னக்காளை (வயது 60) படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னக்காளை அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மிதிவண்டியில் வந்த சின்னக்காளையின் அலட்சியம், மனோகரனின் அதிவேகம் ஆகியவை உயிரை பறிக்க காரணமாக அமைந்துள்ளது. இதில், உயிரிழந்த மனோகரன் வழக்கறிஞர் ஆவார்.