மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப சண்டையில் கொடூரம்; மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மருமகன்.. மனைவியின் உயிர் ஊசல்.! திண்டுக்கல்லில் சோகம்.!
தம்பதிகளுக்கு இடையே நடந்த குடும்பச்சண்டையில் மாமியார் வெட்டிக்கொல்லப்பட்டுள்ள துயரம் பழனியில் நடந்துள்ளது.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதி:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, கலிக்கநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (45). இவரின் மகள் நிவேதா (26). மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கொடுக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால் (34). ஜெயபாலுக்கும் - நிவேதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமும், அலட்சியம்.. இரண்டு உயிர்கள் பரிதாப பலி..! திண்டுக்கல்லில் நடந்த சோகம்.!
திடீர் கருத்து வேறுபாடு:
தம்பதிகள் இருவரின் அன்புக்கு அடையாளமாக தற்போது 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதமாக தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக, நிவேதா பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலையில் ஜெயபால் மாமியாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
மாமியார், மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு:
அங்கு புகார் தொடர்பாக தனது மாமியார் மற்றும் மனைவி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், தான் மறைத்து எடுத்து வந்த அரிவாளால் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இந்த கொடூர சுமப்பவதில் சித்ரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துபோனார். நிவேதா படுகாயத்துடன் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
தலைமறைவான ஜெயபாலுக்கு வலைவீச்சு:
அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பழனி நகர காவல் துறையினர், ஜெயபாலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை; குழந்தைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சோகம்..!