#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மது அரக்கனால் கணவன் - மனைவி பரிதாப பலி.. குடும்ப சண்டையில் நடந்த விபரீதத்தால் பரிதாபம்.. தாய் - தந்தையை இழந்த 3 பிஞ்சுகள்.!
குடிகார கணவனை திட்டியும் மதுபழக்கத்தை கைவிடாத காரணத்தால் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய, காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், வடமதுரை மோளப்பாடியூர் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துவேல். இவர் விவசாயி ஆவார். முத்துவேலின் மனைவி தனலட்சுமி. தம்பதிக்கு மகேஸ்வரி, அக்கம்மாள் என்ற 2 மகள்களும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் மூவரும் வடமதுரையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ள நிலையில், அங்கு குடும்பத்துடன் விவசாயம் பார்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். முத்துவேலிற்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், மனைவி தனலட்சுமி கண்டித்து இருக்கிறார். இதனால் தம்பதியிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலையும் தம்பதியடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனமுடைந்த தனலட்சுமி வீட்டருகே இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துவேல் மனைவியை காப்பாற்ற தானும் கிணற்றில் குதித்துள்ளார்.
இந்த விபரீத சம்பவத்தில் தற்கொலைக்கு முயன்ற தனலட்சுமி மற்றும் அவரை காப்பாற்ற சென்ற முத்துவேல் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நிகழ்வை நேரில் பார்த்த மகள் அக்கம்மாள், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் வடமதுரை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு & மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.