திங்கட்கிழமையே இவ்வளவு கூட்டமா? கடைகளில் அலைமோதும் மக்கள்! நிற்க கூட இடமில்லை!



diwali-crowd-started

பண்டிகை காலங்கள் நெருங்கினாலே அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதுவது வழக்கமாக இருக்கும்.  இந்த வருடம் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது.

இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் 21 நாட்கள் இருக்கும் நிலையில், தற்பொழுதே அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் விடுமுறை தினங்களில் தான் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும். 

Diwali

ஆனால் இன்று வாரத்தின் ஆரம்ப நாளில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் இன்று திங்கட்கிழமை அன்று மக்கள் நிற்க முடியாத அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமாய் கூடினர்.

இப்பவே இவ்வளவு கூட்டம் கூடுகிறதே. இன்னும் பண்டிகையை நெருங்க 20 நாட்கள் உள்ள நிலையில், என்னவாகுமோ என மக்கள் திகைக்கின்றனர்.