Kathir Anand Speech: திமுக வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி; வைரல் வீடியோவின் உண்மை இதோ.!



DMK MP Candidate Vellore Kathir Anand Speech Controversy Issue Know Here Truth 

 

வன்மத்தில் வளர்ந்த தர்மத்தலைவனாய் இருக்கும் கதிர் ஆனந்த் மீதான அவதூறு பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்ட நபர்களுக்கு மக்கள் தங்களின் கருத்துக்களை பதிலாக அளித்து வருகின்றனர்.

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சி தொடர்ந்து களப்பணியில் புயல்வேகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சி உறுப்பினர் தந்நலம் பாராது மக்களுக்காக, மக்களின் வேட்பாளருக்காக வீதி-வீதியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வாறான தருணங்களில் வேட்பாளர்கள் மக்களிடம் பேசுவதும், சில நேரம் அவர்களுடன் மகிழ்ந்து நேரத்தை செலவிடுவதும் இயல்புதான். மக்களுக்காக உழைத்த நபர்களை எப்போதும் மக்கள் தங்களின் வீட்டில் ஒருவராக நினைப்பதால், குடும்பத்தினரை போல பேசி மகிழ்வார்கள். 

அந்த வகையில், சமீபத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்களை உறுப்பினருக்காக போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்காக தான் செய்த பல்வேறு நலப்பணிகள் குறித்து பேசி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் கூட்டணிக்கட்சியினரும் பங்குகொண்டு, அவரின் வெற்றிக்காக உழைத்து வருகிறார்கள். 

dmk

சமீபத்தில் அவர் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது, மக்களை பார்த்து அன்புடன், "நலமாக இருக்கிறீர்களா?. அனைவரும் பவுடர் அடித்து, பேரன் லவ்லி போட்டு பளபளவென இருக்கிறீர்களே" என கேட்டார். மக்கள் அவரை பார்த்து, "தளபதி கொடுத்த ரூ.1000 காரணமாக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்" என கூறினார்கள். இதனைக்கேட்ட வேட்பாளர், "ஓ.. ஆயிரமா?.. நன்றாக தெரிகிறது. பளிச்சென இருக்கிறார்கள். தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என பாராட்டி மேற்படி பிரச்சாரத்திற்கு அனுமதி செய்தனர்.

இதனை கண்டு பொறுக்க இயலாத சில எதிர்க்கட்சியினர், கதிர் ஆனந்த் பேசிய காட்சிகளை சிறுகச்சிறுக தொழில்நுட்ப ரீதியில் மாற்றம் செய்து, மக்களை கதிர் ஆனந்த் இழிவுபடுத்தியதுபோல மாற்றி வன்மத்துடன் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் எதிர்கட்சியினரால் பகிரப்பட்டு அவதூறு கூறப்பட்டாலும், உண்மையை அறிந்த மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து கண்டனத்தை குவித்து வருகின்றனர்.