மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: திமுக முக்கிய தலைவர் மாரடைப்பால் காலமானார்; சோகத்தில் தொண்டர்கள்..!
உசிலம்பட்டி தொகுதியை திமுக பக்கம் கொண்டு வர முக்கியமானவராக இருந்த திமுக தலைவர் மாரடைப்பால் காலமானார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் சுதந்திரம். இவர் திமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆவார். இவரின் மனைவி ரஞ்சினி. இவர் முன்னாள் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர், உசிலம்பட்டி திமுக சேர்மன் ஆவார்.
தம்பதிகள் இருவரும் திராவிட முன்னேற்ற கழகத்திற்காக ஆண்டாண்டுகளாய் உழைத்துள்ளனர். கடந்த காலங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாக உசிலம்பட்டி இருந்தது.
இதனை மாற்றி உசிலம்பட்டி தொகுதியை திமுகவின் பக்கம் கொண்டு வந்தவர்களில், சுதந்திரத்தின் பங்கு அளப்பரியது என்று அம்மாவட்ட திமுகவினர் எப்போதும் கூறுவார்கள்.
இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக சுதந்திரம் காலமானார். அவரின் உடலுக்கு அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.