சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 33 மருத்துவர்களுக்கு கொரோனா!



doctors affected by corona

தமிழகத்திலே சென்னையில் தான் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில் 1,479 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 

சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28924 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

corona

ஆனாலும் கொரோனா தொற்று மருத்துவ பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 33 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

முதல்நிலை களப்பணியாளர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக நாள்தோறும் 150 பேருக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் கடந்த 2 நாட்களில் 33 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர் என மருத்துவனை முதல்வர் தெரிவித்துள்ளார்.