பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.. சினிமா பானியில் பர்தா அணிந்து காதலியை சந்திக்க சென்ற காதலன்... கையும் களவுமாக போலீஸிடம் சிக்கிய சம்பவம்..!
சினிமா பானியில் காதலியை சந்திப்பதற்காக பெண் போல் பர்தா வேடம் அணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரை கல்லூரி காவலாளிகள் மடக்கி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஸ்ரீ மூகாம்பிகா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் அதிக அளவிலான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். எனவே இந்த மருத்துவமனையின் நுழைவாயில் மற்றும் கல்லூரி வளாகத்தில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் ஒருவர் அந்த மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவலாளிகள் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எந்த பதிலும் கூறாததால் பர்தாவை விளக்க சொல்லி காவலாளிகள் பார்த்தபோது உள்ளே இருப்பது ஒரு இளைஞன் என்று தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இளைஞரை பிடித்து காவலாளிகள் போலீஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் மருத்துவ மேற்படிப்பு படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கல்லூரியில் படிக்கும் தனது காதலியை பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த இளைஞரின் பெற்றோர் தங்கள் மகனின் செயலுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அவரை அழைத்து சென்றனர். மேலும் பர்தா அணிந்து காதலியை பார்க்க காதலன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.