தமிழக மாணவர்களின் நலனுக்காக திடீரென மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்கள்.!



dont special status for anna univrsity

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா மத்திய மனித வளத் துறைக்கு கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதி இருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சூரப்பா மத்திய மனித வளத்துறைக்கு கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதியது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து தற்போதைய நிலையிலேயே பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார்.  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பொறுத்தவரை அண்ணா பல்கலைகழகத்தால் 5 வருடத்திற்கு 1500 கோடி ரூபாய் நிதியை திரட்ட முடியும் என தெரிவித்தார்.

Anna university

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில் துணை வேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேபி அன்பழகன், செங்கோட்டையன், சிவி சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி கொண்ட தமிழகக் குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.