மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெரினா கடற்கரை சாலையில் மின்கம்பத்தில் ஏறி போதையில் நிர்வாணமாக நின்ற வாலிபர்.! எரிச்சலடைந்த பொதுமக்கள்.!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வாலிபர் ஒருவர் அங்கிருந்த உயரமான மின்கம்பத்தில் ஏறி நிர்வாணமாக நின்று பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளார். பொதுவாக மாலை 6 மணி அளவில் அந்த சாலை மிகவும் பரபரப்பாகவே இருக்கும். இந்தநிலையில் கம்பத்தின் உச்சிக்கு எரிய அந்த வாலிபர், திடீரென ஆடைகளை அகற்றி நிர்வாணமாக அங்கு உட்கார்ந்து கொண்டார்.
இதனைத்தடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை கீழே இறங்கும் படி கூறினர். ஆனால் அவர் கொஞ்சம் கூட செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து போலீசார் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அந்த வாலிபரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் போதையில் மின் கம்பத்தில் ஏறியது தெரியவந்தது. போதை வாலிபரிடன் அட்டகாசத்தால், அந்த பகுதியில் நேற்று சுமார் 3 மணி நேரம் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.