மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் மாமனாரால் மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்.. போலீசார் தீவிர விசாரணை.!
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் இவரது மனைவி. இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களுடன் வினோத்குமாரின் தந்தை குமரனும் வசித்து வந்துள்ளார்.
டீக்கடையில் வேலை செய்து வரும் குமரன் தினமும் மது அருந்திவிட்டு மது பாட்டில் மற்றும் சிகரெட் துண்டுகளை வீட்டிலேயே போட்டுள்ளார். இதனால் மருமகள் ரம்யாவுக்கும் மாமனருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாமனார் குமரனுக்கும் மருமகளுக்கும் ஏற்பட்ட தகராறு குமரன் கத்தி எடுத்து ரம்யாவின் தலையில் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரம்யா மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதில், ரம்யாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மது போதை மாமனார் குமரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.