மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பலாத்கார முயற்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
ஊட்டியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை கேரளா அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்போது கூடலூரில் இருந்து பேருந்தில் ஒரு வாலிபர் ஏறியுள்ளார். அப்போது அந்த வாலிபர் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் இளம்பெண் தூக்கத்தில் இருந்ததால் கவனிக்கவில்லை. அதன் பின்னர் அந்த இளைஞர் நைசாக இளம் பெண்ணின் அருகில் அமர்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் அதிர்ச்சியில் அலறி அடித்து எழுந்துள்ளார்.
இதனையடுத்து பேருந்தில் இருந்த சக பயணிகள் எழுந்து அந்த இளைஞரை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.