மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் 31-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுகிறதா.? பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம், 25ம் தேதி, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
அந்த ஆய்வு கூட்டம் முடிந்தபிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியார்களிடம் பேசினார். அப்போது முதல்வரிடம், வரும் மே 31-ம் தேதிக்கு பிறகு ஊடரங்கு உத்தரவு தளர்வுபடுத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'மத்திய அரசு என்ன அறிவிப்பு வெளியிடுகின்றது என்று பார்க்கலாம். மருத்துவக் குழுவை விரைவில் சந்திக்க இருக்கின்றோம். மருத்துவக் குழுவினரின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது படிப்படியாக தளர்வு செய்து கொண்டிருக்கிறோம். தொழிற்சாலைகளில் விதிமுறைகளுக்குட்பட்டு பாதி அளவுக்கு திறந்து பணிகள் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.