வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ஆ.ராசா கூறிய வார்த்தை, திமுக தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா.? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.!
திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்துக்கள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா சொல்லக்கூடாத வார்த்தையை, கீழ்த்தரமான வார்த்தையை கூறியுள்ளார். மேலும் இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ராசா கூறிய வார்த்தை, நாட்டு மக்களுக்கு பொருந்துமா? திமுக தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.