மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலக்ட்ரீசி்யன் தற்கொலை.. மனஉளைச்சல் தான் காரணமா.? போலிசார் விசாரணை.!
சேலம் மாவட்டம் கீரப்பாப்பம்பாடி மலையனூர் பகுதியில் ஸ்ரீரங்கன் மகன் குமரவேல் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு குமரேசன் வீட்டின் மேல் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த குமரேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்து குமரேசன் வீடு திரும்பியுள்ளார்.
இதனால் மருத்துவர்கள் குமரேசனிடம் வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுகும்படி கூறியுள்ளனர். எனவே குமரேசன் எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். இதனையடுத்து குமரேசன் திடீரென அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் பதறிப்போன குமரேசனின் தந்தை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் குமரேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் குமரேசன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார் என்றும் அதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.