மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சத்தியமங்கலம் மலை கிராமத்தில் நுழைந்த யானை., மக்கள் பீதி..!!
சத்தியமங்கலத்தில் அருகே உள்ள மலை கிராமம் ஒன்றில் யானை புகுந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் மரங்களில் பழுத்து தொங்கும் பலாப்பழத்தை ருசி பார்க்க யானை கிராமத்துக்குள் புகுந்துள்ளது.
முதலில் உணவை தேடி சென்ற அந்த யானை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து மக்காச்சோளம், கரும்பு தோட்டங்களுக்குள் ஓடி உள்ளது.
பின்னர் பலாமரத்தைப் பார்த்த யானை இரண்டு கால்களையும் மரத்தின் மீது ஊன்றி பலாப்பழத்தை ருசித்துக் கொண்டிருந்தது. பின்னர் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் கிராம மக்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.