மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்த சிறுமியை 4 மாத கர்ப்பிணியாக்கிய 22 வயது காதலன்..! வேலையிடத்தில் வேண்டாத வேலை.!
வேலையிடத்தில் ஒன்றாக பணியாற்றிய சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய காமுகனின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், கலிங்கியம் செல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் (வயது 22). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவர் பணியாற்றி வரும் இடத்தில் கோபிச்செட்டிபாளையத்தை சார்ந்த 17 வயது சிறுமியும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியிடம் நண்பர் போல பழகி வந்த சஞ்சய், பின்னாளில் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் காதல் வயப்பட்டு காதலித்து வந்த நிலையில், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய சஞ்சய் அவரை கடத்தி சென்று மொடச்சூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்.
பின், அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து அத்துமீறவே, சிறுமி தற்போது 4 மாத கர்பிணியாகியுள்ளார். இந்த விஷயம் ஈரோடு குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரியவரவே, விசாரணைக்கு பின்னர் சஞ்சய் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது சிறுமியை காதலித்து திருமணம் செய்து பலாத்காரம் செய்தது உறுதியாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. சஞ்சயை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி ஈரோடு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.