மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பச்சண்டையால் விபரீதம்: எலி மருந்து கொடுத்ததில் குழந்தை பலி., தாய் உயிர் ஊசல்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி, வேலாங்காட்டு வலசை, வாய்க்கால் மேடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். விஜயகுமாரின் மனைவி திவ்யா (வயது 26).
தம்பதிகளுக்கு இரண்டரை வயதுடைய ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இதனால் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை சாப்பிட்டு, மகன் ரோஹித்துக்கும் அதனை கொடுத்துள்ளார். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ரோஹித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த விஜயகுமார் மற்றும் அவரின் உறவினர்கள், மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் செய்தனர்.
குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல விடாமல் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உருவானது. காவல் துறையினர் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். திவ்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.