#BigBreaking: ஈரோடு காவல் துறையினர் மீது வடமாநில தொழிலாளர்கள் சரமாரி தாக்குதல்.. அமைதி பேச்சுவார்த்தையில் வன்முறை..  பெரும் பதற்றம்.!



Erode Modakurichi Police Attacked by North Indian Workers Whom Work Oil Factory

மொடக்குறிச்சி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் காவல் துறையினர் மீது வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் எண்ணெய் கிடங்கு நிறுவனத்தில் பெருமளவில் வடமாநில தொழிலார்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு அங்கு வந்த வாகனம் மோதியதில், ஒரு வடமாநில தொழிலாளி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மொடக்குறிச்சி காவல் துறையினர், வடமாநில தொழிலார்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

erode

அப்போது, காவல் துறையினருக்கும் - வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படவே, சம்பவ இடத்திற்கு அமைதி பேச்சுவார்த்தை என 7 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மட்டும் இருந்துள்ளனர். இதனால் அதிகாரிகள் மீது வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவத்தில், நிகழ்விடத்தில் இருந்த காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலிட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, தற்போது தனியார் எண்ணெய் கிடங்கு நிறுவனத்தில் 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வடமாநில தொழிலாளர்களை சி.சி.டி.வி கேமிரா உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை வளாகத்தில் இருந்த அவசர ஊர்தி, காவல்துறை வாகனங்கள் போன்றவையும் சேதப்படுத்தப்பட்டன.