பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குரூப்-1 தேர்வில் புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த மாணவியை நேரில் சென்று வாழ்த்திய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!
புதுக்கோட்டை மாவட்டத்தின் குக்கிராமமான கீழ செட்டியாப்பட்டியில் வசித்து வரும் டீக்கடைக்காரரின் மகள் ஒருவர் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார்.
அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் பயின்ற பவானியா என்ற பெண் குரூப்-1 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ள பவானியாவை முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.
கீழ செட்டியாப்பட்டிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற விஜயபாஸ்கர் பாவானியா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாவானியா மற்றும் அவரது பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்திய அவர் மற்ற ஊர் மக்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
குக்கிராமத்தில் பிறந்த டீக்கடைக்காரரின் மகள்,
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) August 8, 2022
அரசு பள்ளி / கல்லூரியில் தமிழ்வழிக்கல்வி பயின்று, குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்று DSP-யாக தேர்வாகியிருக்கும் பவானியாவையும், அவருடைய பெற்றோரையும் நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.
லட்சியம் நிச்சயம் வெல்லும்!👏🏻💐 pic.twitter.com/rakZmgUDJc