மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 வருடங்களாக மக்களை ஏமாற்றிய போலி மருத்துவர்.. ஒரே புகாரில் வசமாக சிக்கிய தரமான சம்பவம்.!
மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த போலி டாக்டரை மருத்துவ அதிகாரிகள் கைது செய்து, அவரின் மருத்துவமனைக்கும் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி கைகாட்டி அருகாமையில் அமைந்துள்ள சந்தைப்பேட்டை எதிரே கே.எஸ்.கிளினிக் என்ற ஒரு மருத்துவமனை சட்டத்திற்குப் புறம்பாக, மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளிக்கும் போலி டாக்டரால் இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கிளினிக்கில் மருத்துவம் படிக்காமல் மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்துள்ளது. புகாரைத் தொடர்ந்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.சக்தி மற்றும் அவினாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து கிளினிக் நடத்தி வரும் மருத்துவரிடம் பதிவு எண் மற்றும் சான்றிதழ் போன்ற ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனால் பதற்றமடைந்த அவர் கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாமல் மழுப்பி ஏமாற்றி விடலாம் என்று நினைத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது மருத்துவம் படிக்காமல், போலி டாக்டரான இவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து தாசில்தார் ராகவி மற்றும் அவினாசி போலீசார் ஆகிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட அவர்கள் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயக்குமார் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சை செய்தது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.மேலும், மருத்துவம் படிக்காமல் அனுமதியின்றி ஜெயக்குமார் நடத்தி வந்த மருத்துவமனைக்கு அவினாசி தாசில்தார் ராகவி முன்னிலையில் சீல் வைத்தனர்.