வீடியோ எடுத்துக் கொண்டே விஷம் குடித்த ஜோதிடர் குடும்பம்: போலி வழக்கு பதிவு செய்ததால் விபரீதம்..!



Family of astrologer poisoned while taking video

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஒரு தொழிலதிபர். இவருடைய இடத்தில் இருந்த பிரச்சினைகளை சரி செய்ய, கோவை மாவட்டம், செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா என்பவரை அணுகியுள்ளார்.

இதற்கிடையே, பல்வேறு பூஜைகள் செய்வதாக கூறி 25 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை பெற்றதாகவும், மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலிக்கொடியை பெற்று மோசடி செய்ததாகவும் கூறி, அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா குடும்பத்தினர் மீது கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், தன்மீது காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக வீடியோ வெளியிட்ட பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை அவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த அவரது நண்பர்கள், வீட்டில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பிரச்சன்னாவின் குடும்பத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி மற்றும் குழந்தைக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.