மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமியிடம் காதல்... கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு... 2 குழந்தைகளின் தந்தை கைது.!
தென்காசி அருகே சிறுமியை காதலிப்பதாக கூறிகடத்திச் சென்று தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு குழந்தைகளின் தந்தையை பாவூர்சத்திரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான அஜித்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பது கூறி வந்திருக்கிறார். மேலும் ஆசை வார்த்தைகளை கூறி அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து அஜித் குமாரின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து அவரையும் அந்த சிறுமியையும் தென்காசி அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இரண்டு குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.