மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ இப்படி பண்ணலாமா.? உயிரைப் பறித்த ஷூ ... காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
சென்னையைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
சென்னை திரு வி க நகரை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவரது மகள் ஜோஸ்னா. 17 வயதான இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவரது பெற்றோர் நேற்று கடைக்குச் சென்று இருந்தபோது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த மாணவி ஜோஸ்னா சில தினங்களுக்கு முன்பு தனது தந்தையிடம் புது ஷூ வாங்கி கேட்டிருக்கிறார். அவர் வாங்கித் தர மறுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.