தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் உங்கள் படம், பெயர் வராமல் இருக்க இதனை செய்யுங்கள்.! வேற லெவல் விழிப்புணர்வு.!
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தநிலையில், அத்தியாவசிய பணி செய்கிறவர்கள் தவிர மற்றவர்கள் வெளியே வர வேண்டாம் என்று அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், கொரோனா விழிப்புணர்வுக்காக, வைக்கப்பட்டுள்ள நுாதன பிளக்ஸ் பேனர், அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த பிளக்ஸின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் கிராம புறங்களிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஊரடங்கை மீறி, பலர் சாலைகளில் சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆலங்குடி காமராஜர் சிலை அருகே, நுாதன முறையில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பிளக்ஸ் பேனரில், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போல் அச்சிட்டு இதில், உங்கள் படம், பெயர் இடம் பெறாமல் இருக்க ஊரடங்கை கடைப்பிடிக்கவும். தேவையின்றி அலைந்தால் அவஸ்தை நிச்சயம் உண்டு. "உங்கள் பாதுகாப்பு, உங்கள் கையில், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம். இப்படிக்கு கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள் & கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நுாதன விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.