வடை, பஜ்ஜியை இப்படி கொடுத்ததால் கடைகளுக்கு அபராதம்.! உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி.!



food-safety-department-officials-impose-rs-1000-fine-on

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தள்ளுவண்டி மற்றும் தேநீர் கடைகளில் செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களை பார்சல் செய்து தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தள்ளுவண்டி மற்றும் தேநீர் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Sivaganga Districtமேலும், பொதுமக்கள் அளித்த புகார் நிரூபணமானதால், உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் வைத்து விற்பனை செய்த தள்ளுவண்டி மற்றும் தேநீர் கடைகளுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டு மேலும், செய்தித்தாள்களின் அச்சு மையில் காரீயம் உள்ளது.

இதையும் படிங்க: காதலியை கொன்று, மொட்டை போட்ட காதலனின் விசித்திரமான செயல்.! கங்கையில் நீராடிய அதிர்ச்சி.!

ஆகையால், செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

மேலும், மீண்டும் இவ்வாறு விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: 62 வயதில் இளம்பெண் மீது சபலம்.. உறவின் போது சதித்திட்டம்.. துடிதுடிக்க கொல்லப்பட்ட முதியவர்.!