96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தமிழர்களின் பாரம்பரிய வேஷ்டி-சேலையில் கெத்து காட்டிய வெளிநாட்டினர்! ஆச்சர்யம் அடைந்த கிராம மக்கள்!
ஜனவரி 6-ம் தேதியான இன்று உலக வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. ஆனால் இன்றைய தலைமுறையினர் வேட்டி கட்டும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்துவந்த சுற்றுலாப்பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தின் சென்னையில் இருக்கும் கிளாசிக் ரன் என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த 28-ஆம் தேதி சென்னையில் துவங்கியது.
இதில், இத்தாலி, நியூசிலாந்து, ஹங்கேரி, சீனா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 11 பேர் கலந்துகொண்டு ஆட்டோக்களில் 6 அணியாகப் பிரிந்து 6 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர்.
தூத்துக்குடி வந்த அவர்கள் அங்கிருக்கும் சாயர்புரம் கிராமத்திலுள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அழைத்து வரப்பட்டனர். அங்கு அந்த 6 அணியினருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி, சட்டை அணிந்துகொண்டு விழாவை நடத்தினர்.