மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யார்ரா நீ... என் தோழியை கல்யாணத்துக்கு வற்புறுத்துறியா? பெண்ணின் காதலனை தாக்கிய கும்பல்..!
தோழியை திருமணத்திற்கு வற்புறுத்தியதால் 5 பேர் கொண்ட கும்பல், அவரது காதலனை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். ஏலகிரியைச் சார்ந்தவர் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஐஸ்வர்யாவை சக்திவேல் வற்புறுத்த்தி வந்துள்ளார்.
இதனால் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் சாந்தகுமார், பூவரசன், ஹரி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் ஏலகிரியில் இருந்து கத்தி உட்பட பயங்கர ஆயுதத்துடன் சக்திவேல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
சக்திவேலை அழைத்து ஐஸ்வர்யாவை திருமணத்திற்காக வற்புறுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். அப்போது இருதரப்பு நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், சக்திவேலின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு வந்த அக்கப்பக்கத்தினர் ஐஸ்வர்யாவின் 5 நபர்களையும் சுற்றி வளர்த்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடி விட்டார்கள். பிற மூன்று பேரையும், அவர்களது பயங்கர ஆயுதங்களுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதில் குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் தாக்கியதில் பூவரசன், ஹரி, சாந்தகுமார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.