மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓட்டலில் நோயாளிக்கு வாங்கிச்சென்ற இட்லி.! பார்சலை பிரித்துப்பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.! ஓட்டலை மூடிவிட்டு எஸ்கேப் ஆன உரிமையாளர்.!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், நோயாளிக்கு வாங்கி சென்ற இட்லியில் முழு தவளை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முருகேசன் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முருகேசனை பார்ப்பதற்காக அவரது உறவினர் வந்துள்ளார். பின்னர் மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் ஓட்டலில் முருகேசனுக்கு நான்கு இட்லியை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
பின்னர் மருத்துவமனையில், இட்லி பார்சலை முருகேசன் பிரித்து சாப்பிட முயன்றபோது ஒரு இட்லிக்குள் இறந்த நிலையில் தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக தவளை கிடந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்று, உரிமையாளரிடம் புகார் செய்தனர்.
இதனையடுத்து அவர்கள் வாங்கிச் சென்ற இட்லிக்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு பின்னர் இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை அவர்கள் கண்முன்னே ஓட்டல் உரிமையாளர் கீழே கொட்டிவிட்டு பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஓட்டலை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாக பரவி வருகின்றது.