தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம்: பா.ஜனதா கட்சியின் ரகசிய திட்டம்..!



General civil law before election in gujarat

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெறுவது எளிதாக இருக்காது, அங்கு கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜனதா அரசு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது .இதற்கிடையே, குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று அல்லது நான்கு பேர் இருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது “பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்கள் மட்டுமே இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.