மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதவை திறந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! தந்தையின் மோசமான பழக்கத்தால் மகளுக்கு நேர்ந்த விபரீதம்!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மகள் உள்ளார்.அவர் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் குடித்துவிட்டு தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு நகடந்த சில தினங்களுக்கு முன்பும் செல்வராஜ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் அவரது மக; சினேகா, தனது தந்தையிடம், அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள்? என தட்டிக்கேட்டுள்ளார். இதனால் பெரும் ஆத்திரமடைந்த செல்வராஜ், மகள் என்றுகூட பார்க்காமல் சினேகாவை அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தாக்கியுள்ளார்.
இந்நிலையில் சினேகா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய அவரது தாய் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்து கதறியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தந்தை குடித்துவிட்டு தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்தாரா? அல்லது செல்வராஜ் மண் வெட்டியால் தாக்கியதில் சினேகா இறந்து அதனை மறைக்க செல்வராஜே மகளின் உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுகிறாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் மோசமான குடிப்பழக்கத்தால் நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.