மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிக்க மறுத்த 16 வயது சிறுமி! தொல்லை கொடுத்து வாலிபர் செய்த காரியத்தால் இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!
கடலூர் மாவட்டம் சின்னப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவரது இம்சையை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து பின் ஜாமீனில் வெளியே விட்டுள்ளனர்.
ஆனால் அவர் மீண்டும் சிறுமியிடம் காதலிக்கக் கூறி தொல்லை செய்துள்ளார். மேலும் விஷ பாட்டில் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நீ காதலிக்கவில்லை என்றால் நான் விஷத்தை குடித்துவிடுவேன். இல்லையெனில் நீ விஷத்தை குடித்து இறந்துவிடு என மிரட்டியுள்ளார். வாலிபரின் செயலால் பெரும் ஆத்திரமடைந்த அந்த சிறுமி உடனே அந்த விஷத்தை வாங்கி குடித்துள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.